Categories: இந்தியா

மேகாலயாவில் புதிய திருப்பமாக தேசிய மக்கள் கட்சி ஆட்சி?

Published by
Venu

பா.ஜ.க. ஆட்சி  மேகாலயாவில் அமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய திருப்பமாக அக்கட்சியின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி வரும் 6-ம் தேதி பதவி ஏற்கிறது.

மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 19 இடங்களையும், காங்கிரஸ் 21  இடங்களையும் கைப்பற்றின. ஐக்கிய ஜனநாயக கட்சி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெற்று இருந்தன. ஆட்சியமைக்க 30 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தது.

ஒருபுறம் அங்கு ஆட்சியை தக்க வைக்க 21 இடங்களைக் கொண்ட காங்கிரஸ் போராடி வந்த நிலையில், மற்றொரு புறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க 2 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க. தீவிரம் காட்டியது. பா.ஜ.க. கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேசிய மக்கள் கட்சிக்கே ஆதரவு அளிக்க ஐக்கிய ஜனநாயக கட்சி தலைவர் டான்குபர் ராய் முடிவு செய்துள்ளார். ஹெச்எஸ்பிடிபி (HSPDP) கட்சியும், மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளரும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அக்கட்சியுடன் கைகோர்த்துள்ள 19 இடங்களை வென்ற தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா (Conrad sangma) ஆட்சி அமைக்க அழைக்குமாறு மேகாலய ஆளுநர் கங்கா பிரசாத்திடம் கடிதம் அளித்துள்ளார். வரும் 6-ம் தேதி காலை பத்தரை மணிக்கு கான்ராட் சங்மா முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார். கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துவது சிரமம் தான் என்ற போதிலும், தங்களுக்கு ஆதரவளித்துள்ள உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என தாம் நம்புவதாக சங்மா கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

6 mins ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

15 mins ago

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

1 hour ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

2 hours ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

2 hours ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

2 hours ago