பா.ஜ.க. கூட்டணி ஆட்சி திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநிலங்களை தொடர்ந்து புதிய திருப்பமாக மேகாலயாவிலும் அமைக்கிறது.
மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களையும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களையும் கைப்பற்றின. யூடிபி (UDP) உள்ளிட்ட இதர கட்சிகள் 17 இடங்களில் வெற்றி பெற்று இருந்தன. ஆட்சியமைக்க 30 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒருபுறம் அங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் போராடி வந்த நிலையில், மற்றொரு புறம் தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. தீவிரம் காட்டியது. ஆனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழலில், 6 உறுப்பினர்களை கொண்டுள்ள ஐக்கிய ஜனநாயக் கட்சியின் பக்கம் இரு கட்சிகளின் பார்வை திரும்பியது.
இதை அடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கையோடு, காங்கிரஸின் முகுல் சங்மா, ஐக்கிய ஜனநாயக் கட்சி தலைவர் டான்குபர் ராய் (Donkupar Roy) வீட்டுக்குச் சென்றார். அதே நேரத்தில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் தனித்தனியாக டான்குபர் ராயை சந்தித்து தங்களுக்கு ஆதரவளிக்க வலியுறுத்தினர்.
இந்த நிலையில், தேசிய மக்கள் கட்சியுடன் இணைந்துள்ள பா.ஜ.க. கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க டான்குபர் ராய் முடிவு செய்துள்ளார். இதனால் பா.ஜ.க., தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக் கட்சி கூட்டணி பலம் 27ஆக அதிகரித்துள்ளது. ஹெச்எஸ்பிடிபி (HSPDP) கட்சியும், மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளரும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளதால், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைத்து விட்டது. இதனால் திரிபுரா, நாகலாந்தை தொடர்ந்து மேகாலயாவிலும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவிழந்துள்ளது என்றும், இந்த வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9கிமீ…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது ஃபெங்கால் புயலாக மாறும் என கூறப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது ஃபெங்கல் புயலாக மாறும் என கூறப்பட்டிருந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த…
சென்னை : கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை முதல் சென்னை வரையில் வட கடலோர மாவட்டங்கள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை…