மத்திய அரசுக்கு அடிபணியாத பிட்காயின்!அறிவிப்புக்கு பின் அதிகரித்த பிட்காயின் பரிவர்த்தனை …
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பிட்காயின் எனப்படும் கண்ணுக்குத்தெரியாத கணிணி பணம் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கதல்ல என அறிவித்த பிறகும், அதன் பரிவர்த்தனை குறையவில்லை என பிட்காயின் பரிவர்த்தனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் பிட்காயின் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கதல்ல என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பிட்காயின் பரிவர்த்தனையில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் சற்றுத் தேக்கம் நிலவியது. தற்போது மீண்டும் வழக்கம் போல பிட்காயின் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக ஸீபே (Zebpay), யுனோகாயின் (Unocoin), காயின்செக்யூர் (Coinsecure) மற்றும் பிடிசிஎக்ஸ் இண்டியா (BTCXIndia) போன்ற பரிவர்த்தனை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அருண்ஜேட்லி அறிவிப்பைத் தொடர்ந்து சிறு பீதி ஏற்பட்டாலும் மீண்டும் பிட்காயின் பரிவர்த்தனை பழைய நிலைக்குத் திரும்பியதோடு அதிகரிக்கவும் செய்ததாக அவை கூறின.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.