ஆஞ்சநேயர் பிறந்த இடம் இதுதான்.. ஆதாரத்துடன் கூறிய திருப்பதி தேவஸ்தானம்!
திருமலை மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து வெளியிட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி, திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் வெளியிடப்படும் என்று திருப்பதி, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து திருப்பதி, திருமலை தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர். அதன்படி, இந்த அப்புத்தகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி வெளியிட்டார். அதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெற்றுக்கொண்டார்.
அதன்பின் பேசிய அவர், ஆஞ்சநேயர் பிறந்தது அஞ்சனாத்ரி என்பதை புராணம், வாய்வழி, அறிவியல் மற்றும் புவியியல் ஆதாரங்களால் திருப்பதி தேவஸ்தானம் நிரூபித்து, அதுகுறித்து அறிஞர்கள் குழு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தயாரித்த அறிக்கை, ராம நவமி தினத்தில் வெளில்யிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், ராமர் பிறப்பிடம் அயோத்தி என்று கூறிய அவர், அவரின் பக்தனான அனுமன் பிறந்தது, திருமலை அஞ்சனாத்ரி ஆகும். அதனை திருப்பதி தேவஸ்தானம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளதாகவும், தாம் அனுமனின் பக்தன் என்றும், அதற்காக மகிழ்ச்சியடைவதாகவும், அனுமனின் பிறப்பிடம் குறித்து ஆராய 4 மாதங்கள் அயராது உழைத்த அறிஞர்கள் குழுவுக்கு தனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.