விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது – பாஜக MLA

Default Image

போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கொண்டுவந்த புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் 40 நாட்களு மேலாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 8 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த சுமுக நிலையம் ஏற்படவில்லை. மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுதல், குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்தல் போன்றவை விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.

இந்நிலையில், போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ மதன் திலாவர் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். விவசாயிகள் என்று அழைக்கப்படும் சிலர் சதி செய்கிறார்கள் என்றும் இந்த விவசாயிகள் எந்தவொரு இயக்கத்திலும் பங்கேற்கவில்லை. ஆனால், கோழி பிரியாணி மற்றும் உலர் பழங்களை ஓய்வுக்காக அனுபவிக்கிறார்கள். இது பறவைக் காய்ச்சல் பரவுவதற்கான சதி. விவசாயிகள் போராட்டம் நடத்த வரவில்லை, சுற்றுலாவாக அனுபவிக்கிறார்கள்.

அனைத்து வகையான ஆடம்பரங்களையும் பெறுகிறார்கள் என்று கூறியுள்ளார். அவர்களில் போராளிகள், கொள்ளையர்கள் மற்றும் திருடர்கள் இருக்கலாம். இல்லை விவசாயிகளின் எதிரிகளாகவும் கூட இருக்கலாம். இவர்கள் தான் நாட்டை அழிக்க விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் போராட்டத்தை அரசாங்கம் அகற்றாவிட்டால், நாட்டில் ஒரு பயங்கரமான பறவைக் காய்ச்சலை எதிர்பார்க்க முடியும். இவர்கள் ஒன்று சேர்வதை தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாகவும், இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ.மதன் திலாவரின் கருத்துக்கு மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அவரது அறிக்கை வெட்கக்கேடானது. இது பாஜகவின் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளது. எம்.எல்.ஏ. மதன் திலாவரின் கருத்துக்களுக்கு பதிலளித்த ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா, விவசாயிகளுக்கு கொள்ளையர்கள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்