கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல்…! தமிழக எல்லையில் தடுப்பு பணிகள் தீவிரம்..!
கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழக எல்லையில் தடுப்பு பணிகள் தீவிரம்.
கேரளாவில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், ஆலப்புழா மாவட்டத்தில் அதிகமானோர் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த பறவை காய்ச்சல் தமிழகத்திற்குள் நுழையாதவாறு தடுக்கும் வண்ணம் நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லை சோதனை சாவடியில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கக்கநல்லா சோதனை சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்னர் நீலகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்படுகிறது. கோழிகள் மற்றும் பறவைகளுக்கு தீவனங்களை ஏற்றி வரும் வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வாத்துகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.