இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. ஹரியானாவை சேர்ந்துள்ள சிறுவன் ஒருவன் பறவை காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைகளை ஏவியன் இன்புளூயன்சா என்ற வைரஸ் தாக்கி பறவைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தும். இந்த காய்ச்சலை பறவை காய்ச்சல் என்றழைக்கிறோம். இது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும். இந்த வைரஸ் எச்5என்8 என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு திடீரென காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுவனுக்கு சரி ஆகாததால், அவனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2 ஆம் தேதி சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதிக்கப்பட்டதில் சிறுவனுக்கு எச்5 என்8 வைரஸ் தாக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அதனால் அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். அதனால் இந்தியாவில் பறவை காய்ச்சலால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணத்தால் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சிறுவனுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நோய் குறித்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளதாவது, நீங்கள் வசிக்கும் பகுதியில் பறவைகள் இருந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இந்த வைரஸ் கண், மூக்கு, வாய் மற்றும் சுவாசம் வழியாக பரவும். இந்த வைரஸ் காற்றில் மூலமாக பரவக்கூடியது.
அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், கண் சிவப்பாகுதல், சளி, தொண்டை வலி, சுவாசப்பிரச்சனை, தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும் என்று கூறியுள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…