பறவை மோதி தீப்பிடித்த விமானம் – சாதூரியமாக தரை இறங்கி விமானி !
ஹரியானா மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் பயிற்சியில் இருந்த போது தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை உடனே கண்ட விமானி விமானத்தின் கூடுதல் பெட்ரோல் டேங்கையும் சிறிய வெடிகுண்டையும் கீழே இறக்கி வெடிக்கச் செய்தார்.
அம்பாலா விமான படை தளத்தில் ஜாக்குவார் ரக விமானம் பயிற்சியில் இருந்தது. அப்போது விமானத்தின் மீது பறவை ஓன்று மோதியதில் அதன் இன்ஜின் செயலிந்தது. அப்போது விமானத்தை சாதுரியமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தக்கூடிய பெட்ரோல் டேங்க் மற்றும் வெடிகுண்டை கீழே விழச்செய்தார். இந்த சம்பவம் விமானப்படை தளத்தின் அருகே இருக்கும் பால்த்தேவ் நகரின் பகுதியில் நடந்துள்ளது.
விமானத்தின் பாகங்கள் வெடிக்கும் போது அருகில் இருந்த பகுதிகளும் சேதமடைந்துள்ளன.இதில் விமானத்தின் பாகங்கள் ஒரு சில வீட்டின் மேற் கூறையிலும் சாலையிலும் விழுந்தன. இந்த கட்சியானது தற்போது வெளியாகி வைரலாக உள்ளது.