#Biparjoy: மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை..! பிரதமர் மோடி உத்தரவு..!

PM Modi

பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட பிபார் ஜாய் புயல், சௌராஷ்டிரா, கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் உள்ள ஜகாவ் துறைமுகத்திற்கு அருகே, 15ம் தேதி மிக தீவிர புயலாக மாறி, 150 கிமீ வேகத்தில் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிமீ வேகத்தில் வீசும் என்றும், அப்பகுதி முழுவதும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பிபார் ஜாய் புயல் தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மதியம் 1 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில், புயலால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும், மின்சாரம், தொலைத்தொடர்பு, சுகாதாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் பராமரிப்பு உறுதி செய்யவும் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்