பிபின் ராவத் உயிரிழப்பு – பாகிஸ்தான் ஆயுதப்படை இரங்கல்..!
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது தொடர்பாக பாகிஸ்தான் ஆயுதப்படை இரங்கல்.
நீலகிரி குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிர் இழந்தனர். ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
பிபின் ராவத்தின் அகால மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்திய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தளபதி ராவத்தின் மறைவால் நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆயுதப்படை இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் சி.ஜே.சி.எஸ்.சி., ஜெனரல் நதீம் ராசா மற்றும் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா, சிஓஏஎஸ் ஆகியோர் மதிப்புமிக்க உயிர்களை தியாகம் செய்துள்ளனர் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
General Nadeem Raza, CJCSC & General Qamar Javed Bajwa, COAS express condolences on tragic death of #CDS General #BipinRawat, his wife and loss of precious lives in a helicopter crash in India
— DG ISPR (@OfficialDGISPR) December 8, 2021