மக்களவையில் வாடகைத்தாய் சட்டமசோதா தாக்கல்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மக்களவையில் நேற்று வாடகைத்தாய் சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், சட்டபூர்வமாக திருமணம் செய்துகொண்ட இந்திய தம்பதி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு பின்னரே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இதற்கு தம்பதியாக உள்ள 23 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களும், ஆண்களும் 26 முதல் 55 வயது வரையிலான தகுதியுள்ளவர்கள்.
25 முதல் 35 வயதுள்ள பெண்கள் திருமணமாகி தனக்கு சொந்தமாக ஒரு குழந்தை இருந்தால் நெருங்கிய உறவினரான தம்பதிக்கு வாடகைத்தாயாக ஒருமுறை மட்டுமே செயல்படலாம் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .