தமிழ்நாடு

சட்டத்தில் இந்தியாவிற்கு பதில் பாரத் என பெயர் மாற்றும் மசோதா.! அமித்ஷா தாக்கல்

Published by
பாலா கலியமூர்த்தி

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நிறைவடைய உள்ள நிலையில், இந்திய குற்றவியல் சட்டம் உள்ளிட்ட 3 முக்கிய சட்டங்களை புதுப்பிக்க மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்ற மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது, இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மசோதா தாக்கல் செய்தார் அமைச்சர் அமித்ஷா. அதன்படி, இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) பெயரை “பாரதிய நியாய சங்ஹீத” என மாற்றவும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CRPC) பெயரை “பாரதிய நாகரிக் சுரக் ஷ சங்ஹீத” என மாற்றவும், இந்திய சாட்சிகள் சட்டத்தின் (IEA) பெயரை “பாரதிய சக் ஷயா” என மாற்றவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட 3 சட்டங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். அமித்ஷா கூறுகையில், இந்தச் சட்டத்தின் கீழ், தேசத்துரோகம் போன்ற சட்டங்களை ரத்து செய்கிறோம். 1860 முதல் 2023 வரை, நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்களின்படி செயல்பட்டது. மூன்று சட்டங்கள் மாற்றப்பட்டு, நாட்டில் குற்றவியல் நீதி அமைப்பில் பெரிய மாற்றம் வரும் என்றார்.

இந்த மசோதாவின் கீழ், தண்டனை விகிதத்தை 90%க்கு மேல் எடுக்க வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். அதனால்தான், 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கும் பிரிவுகள், அனைத்து வழக்குகளின் கீழும் தடயவியல் குழு குற்றம் நடந்த இடத்திற்குச் செல்வது கட்டாயமாக்கப்படும் என்ற முக்கிய விதியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என கூறியுள்ளார். இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் பாஜக எம்பி மக்களவையில் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

19 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

19 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

20 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

21 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

22 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

23 hours ago