திருப்பதி கோவிலில் உண்டியல் வருமானம்: ரூ.1 கோடியே 95 லட்சம்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 95 லட்சம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக, இலவச சுவாமி தரிசனம் நடைமுறை கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, இலவச தரிசனத்திற்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கிட்டூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும், நாள்தோறும் 2,000 டோக்கன்படி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால், செப்டம்பர் 20 முதல் இலவச தரிசனத்திற்கு அனைத்து பக்தர்களுக்கும் டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, 8,000 இலவச டோக்கன் வழங்கப்படுகிறது.
நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 28 ஆயிரத்து 880 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும், அன்றைய தினமே 17 ஆயிரத்து 350 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். இதனால் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 95 லட்சம் வந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.