சூதாட்டம், ஆன்லைன் பந்தயம் தடுக்க சட்டசபையில் மசோதா.!
சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் சூதாட்டம், ஆன்லைன் பந்தயம் போன்றவற்றை தடுக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
பணம் சம்பாதிப்பதற்காக சூதாட்டம் மற்றும் ஆன்லைன் பந்தயம் (பெட்டிங்) நடைபெறுவது தற்போது அதிகரித்து வருகிறது, மேலும் ஆன்லைனில் இதுபோன்ற பெட்டிங் ஆப்ஸ்கள் வந்துவிட்ட பிறகு இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது.
இதனைத்தடுக்க சத்தீஸ்கர் மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது, பொது இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது ரூ.3,000இலிருந்து ரூ.10,000வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.