ஆன்லைன் சூதாட்டம் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான மசோதாவுக்கு ஒப்புதல்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான மசோதாக்கள் இன்று மக்களவை தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளின் அடிப்படையில் இன்று 2 மசோதாக்கள் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார.
தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு பாதிப்பில்லாத வகையில் மசோதாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், 17வது நாளான இன்று, மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் மக்களவையை புறக்கணித்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.