பில்கிஸ் பானு வழக்கு – குற்றவாளிகளின் மனுக்கள் தள்ளுபடி..!

Published by
murugan

2002-ல் குஜராத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் பரவியது. அப்போது பில்கிஸ் பானு  ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது பில்கிஸ் பானு கர்ப்பமாக இருந்தார். மேலும், அந்தக் கும்பல் பில்கிஸ் பானு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும்  கொன்றது. இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் குஜராத்தின் பஞ்சமஹால் சிறையில் அடைக்கப்பட்டனர். 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது. குஜராத் மாநில அரசு விடுதலை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களின் விடுதலை செல்லாது என கடந்த ஜனவரி 8-ம் தேதி தீர்ப்பளித்து அவர்கள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் சரணடைய உச்சநீதிமன்றத்தில் மேலும் அவகாசம் கோரியுள்ளனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரில் 3 பேர் கூடுதல்  கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு..!

பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  மனுதாரர்கள் கூறிய காரணங்கள் விசாரிக்க உகந்தவை அல்ல என நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகள் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட காலக்கெடு ஜனவரி 21-ம் (நாளை மறுநாள்) தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…

12 minutes ago

அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!

சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

28 minutes ago

“தவெக ஐடி விங் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.,” தொண்டர்களுக்கு விஜய் ‘வீடியோ’ அட்வைஸ்!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…

1 hour ago

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

1 hour ago

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

2 hours ago

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

2 hours ago