பில்கிஸ் பானு வழக்கு – குற்றவாளிகளின் மனுக்கள் தள்ளுபடி..!
![Bilkis Bano case accused](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/01/Bilkis-Bano-case-accused.webp)
2002-ல் குஜராத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் பரவியது. அப்போது பில்கிஸ் பானு ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது பில்கிஸ் பானு கர்ப்பமாக இருந்தார். மேலும், அந்தக் கும்பல் பில்கிஸ் பானு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும் கொன்றது. இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் குஜராத்தின் பஞ்சமஹால் சிறையில் அடைக்கப்பட்டனர். 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது. குஜராத் மாநில அரசு விடுதலை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களின் விடுதலை செல்லாது என கடந்த ஜனவரி 8-ம் தேதி தீர்ப்பளித்து அவர்கள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் சரணடைய உச்சநீதிமன்றத்தில் மேலும் அவகாசம் கோரியுள்ளனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரில் 3 பேர் கூடுதல் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு..!
பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுதாரர்கள் கூறிய காரணங்கள் விசாரிக்க உகந்தவை அல்ல என நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகள் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட காலக்கெடு ஜனவரி 21-ம் (நாளை மறுநாள்) தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : தைப்பூச திருவிழா முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
February 11, 2025![Today Live 11 02 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Today-Live-11-02-2025.webp)
AI உச்சி மாநாட்டுக்கு முன் பிரமாண்ட விருந்து…மாக்ரோன், ஜேடி வான்ஸை சந்தித்த பிரதமர் மோடி !
February 11, 2025![PM Modi Meets Macron, JD Vance](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/PM-Modi-Meets-Macron-JD-Vance.webp)
கருடனை விட கவிழ்ந்த விடாமுயற்சி! அஜித் படத்திற்கு இந்த நிலைமையா?
February 11, 2025![garudan vs vidaamuyarchi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/garudan-vs-vidaamuyarchi.webp)
INDvENG : டேஞ்சரில் சச்சின் சாதனை! முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?
February 11, 2025![rohit sharma sachin tendulkar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-sachin-tendulkar.webp)