பில்கிஸ் பானு வழக்கு…கூடுதல் அவகாசம் கோரி மனு..!
2002-ல் குஜராத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் பரவியது. பில்கிஸ் பானோவின் குடும்பமும் இந்தக் கலவரத்தில் சிக்கியது. அப்போது பில்கிஸ் பானுவை ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது பில்கிஸ் பானோ கர்ப்பமாக இருந்தார். மேலும் , அந்தக் கும்பல் பில்கிஸ் பானு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும் கொன்றது. இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் குஜராத்தின் பஞ்சமஹால் சிறையில் அடைக்கப்பட்டனர். 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது. குஜராத் மாநில அரசு விடுதலை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களின் விடுதலை செல்லாது என கடந்த ஜனவரி 8-ம் தேதி தீர்ப்பளித்து அவர்கள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மாணவிக்கு பாலியல் தொல்லை – பள்ளி முதல்வர் கைது..!
இந்நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் சரணடைய உச்சநீதிமன்றத்தில் மேலும் அவகாசம் கோரியுள்ளனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரில் 3 பேர் கூடுதல் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். குற்றவாளிகளின் வழக்கறிஞர் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரினார். உச்சநீதிமன்றம் குற்றவாளிகளின் மனுவை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது.
குற்றவாளி கோவிந்த் நாய் 4 வார கால அவகாசத்தையும், மித்தேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்த்னா ஆகியோர் 6 வார கால அவகாசத்தையும் கேட்டுள்ளனர். இதற்கு, இந்த குற்றவாளிகள் தனிப்பட்ட காரணங்களை மேற்கோள் காட்டியுள்ளனர். பில்கிஸ் பானோ வழக்கில், குற்றவாளிகள் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட காலக்கெடு ஜனவரி 21-ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.