பில்கிஸ் பானு வழக்கு – குஜராத் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
பில்கிஸ் பானு தொடர்பான வழக்கில் குஜராத் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை சமீபத்தில் குஜராத் அரசு விடுதலை செய்தது. குற்றவாளிகளின் தண்டனை குறைப்பு குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, 11 பேரை அம்மாநில அரசு விடுவித்தது. இந்த விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான கடந்த விசாரணையில், மத்திய அரசும், குஜராத் அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேர் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், குஜராத் அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.