பில்கிஸ் பானு வழக்கு: சிறையில் சரணடைய 11 பேரில் 9 பேர் தலைமறைவு.?

Published by
கெளதம்

பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சிறையில் சரணடைய உச்ச நீதிமன்றம் தீர்ப்புயளித்துள்ள நிலையில், 9 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  இதற்கிடையில் 11 குற்றவாளிகளும் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி குஜராத் அரசு பரிந்துரையின் பேரில் நன்னடத்தை மற்றும் தண்டனை குறைப்பு விதிப்படி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த விடுதலையை எதிர்த்து, பில்கிஸ் பானு உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியது.

பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்ய குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, சிறை அதிகாரிகளிடம் சரணடைய இரண்டு வார கால அவகாசம் அளித்த நிலையில், 11 குற்றவாளிகளில் 9 பேர் “காணாமல் போயுள்ளனர்” என்று தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

உங்கள் மகன்களுக்கு 2-வது மொழியா? பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி!

சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…

17 minutes ago

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…

1 hour ago

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: முடிவுக்கு வந்த மீட்பு நடவடிக்கை… அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

2 hours ago

தனுஷ் கிட்ட கதை சொல்லிருக்கேன்! டிராகன் இயக்குநர் சொன்ன சீக்ரெட்!

சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…

2 hours ago

ரோஹித் சர்மா எதுக்குங்க ஓய்வு பெற வேண்டும்? கடுப்பான ஏபி டிவில்லியர்ஸ்!

டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…

3 hours ago

LIVE : தமிழ்நாடு பட்ஜெட் அப்டேட் முதல்..பாகிஸ்தான் ரயில் கடத்தல் வரை!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

3 hours ago