இன்று பீகார் முதற்கட்ட வாக்கு பதிவு தொடங்கியது. பாதுக்காப்பு பணியில் 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாப் பரவலுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இச்சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.முதற்கட்ட வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
பீகாரில் உள்ள71 தொகுதிகளுக்கு மட்டும் இன்று முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது.முதற்கட்ட தேர்தல் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முதலமைச்சர் நிதிஷ் குமார் அமைச்சரவையின் 6 அமைச்சர்களின் எதிர்கால அரசியல் முதற்கட்ட வாக்கு பதிவில் தான் நிர்ணக்கப்படுகிறது.
3 கட்டங்களாக நடைபெறுவதால் பாதுகாப்பு பணியில் சுமார் 30,000 மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவிக்கப்பட்டுள்ளனர்.மாவோயிஸ்டுகள் அதிக நடமாட்டமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தலில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி 7 லட்சம் சேனிடைசர்கள், 46 லட்சம் முக கவசங்கள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 6.7 லட்சம் முக கவசங்கள், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் சுமார் 2 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடக்கத்தது. மேலும் 80 வயது கடந்த பீகார் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தபால் ஓட்டு மூலம் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…