#BiharElection2020: நிதீஷ் குமார் பீகார் முதல்வராக மாற வாய்ப்பில்லை – சிராக் பாஸ்வான்
நிதீஷ் குமார் ஒருபோதும் பீகார் முதல்வராக வரமாட்டார் என்று லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் இன்று தெரிவித்தார்.
தற்போது, 78 சட்டசபை பிரிவுகளில் இன்று மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது, இதன், ஒரு பகுதியாக 2.35 வாக்காளர்கள் 1,204 வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிப்பார்கள்.
இந்த தேர்தலில் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதில், அவரது மகன் சிராக் பஸ்வான் தலைமையில் அணைத்து கட்சி தேர்தலையும் எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சிராக் பஸ்வான், “பீகார் மக்கள் இந்த நேரத்தில் எங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால், ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. நிதீஷ் குமார் ஒருபோதும் முதல்வராக மாட்டார் “என்று பாஸ்வான் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ஜனநாயகத்தில் பங்கேற்று வாக்களிக்க அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்தத் தேர்தலில் பீகார் அதன் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும். நிதீஷ் சோர்வாக இருக்கிறார், அவரால் மாநிலத்தை கையாள முடியவில்லை என்று கூறினார்.
இதற்கிடையில், இன்று காலை 7 மணி முதல் 33,782 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு தொடங்கியது. தேர்தல் ஆணையம் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, வடக்கு பீகாரின் 15 மாவட்டங்களில் 78 சட்டமன்ற பிரிவுகளில் மொத்தம் 2.35 வாக்காளர்களில், 1.23 ஆண்கள், 1.12 கோடி பெண்கள், 894 பேர் “மூன்றாம் பாலினம்” பிரிவில் உள்ளனர்.