இன்று பீகார் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது. பாதுக்காப்பு பணியில் 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாப் பரவலுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இச்சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.இன்று 71 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பீகார் தேர்தலில் மொத்தவேட்பாளர் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மொத்த வாக்களர்கள் 2.14 கோடி.தேர்தலில் போட்டியிடுபர்வகளில் 31% பேர் மீது கிரீமினல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.30,000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இனி பீகார் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 71 தொகுதிகள் குறித்த விவரம் இதோ:
ஆர்ஜேடி-41 தொகுதிகளிலும்,ஜேடியூ-41 தொகுதிகளிலும்,பாஜக 29 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், எல்ஜேபி-41 தொகுதிகளிலும் களம் காணுகின்றன.
இந்நிலையில் பீகார் முதற்கட்ட தேர்தலில் களத்தில் நிற்கும் பிரபலபங்களின் பட்டியல் இதோ:
பாஜக வேட்பாளராக காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஷ்ரேயாசி சிங் களத்தில் உள்ளார்.மேலும் முதலமைச்சர் நித்திஸ்குமாரின் அமைச்சரவையின் 6 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியும் முதல்கட்ட தேர்தலில் களம் காணுகின்றனர்.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.2ம் கட்ட வாக்குப்பதிவு நவ.,3ந்தேதி நடைபெறுகிறது.3ம்கட்ட வாக்குப்பதிவு நவ.,7ந்தேதி நடைபெறுகிறது.வாக்கு எண்ணிக்கை நவ.,10ந்தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வாக்களிப்பதிவு நடைபெறுவதற்கு முன்னர் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜாஷ்வி யாதவ் தனியார் தொலைக்கட்சியிக்கு அளித்த போட்டியில் கூறியுள்ளதாவது:
வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துங்கள், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் மாநில மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று தெரிவித்தார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…