இன்று பீகார் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குபதிவு தொடங்கிய நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னெச்சரிக்கைகளை கடைபிடித்து வாக்களிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாப் பரவலுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.இன்று 71 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பீகார் தேர்தலில் மொத்தவேட்பாளர் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மொத்த வாக்களர்கள் 2.14 கோடி.தேர்தலில் போட்டியிடுபர்வகளில் 31% பேர் மீது கிரீமினல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.30,000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இனி பீகார் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 71 தொகுதிகள் குறித்த விவரம் இதோ:
ஆர்ஜேடி-41 தொகுதிகளிலும்,ஜேடியூ-41 தொகுதிகளிலும்,பாஜக 29 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், எல்ஜேபி-41 தொகுதிகளிலும் களம் காணுகின்றன.
இந்நிலையில் பீகார் முதற்கட்ட தேர்தலில் களத்தில் நிற்கும் பிரபலபங்களின் பட்டியல் இதோ:
பாஜக வேட்பாளராக காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஷ்ரேயாசி சிங் களத்தில் உள்ளார்.மேலும் முதலமைச்சர் நித்திஸ்குமாரின் அமைச்சரவையின் 6 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியும் முதல்கட்ட தேர்தலில் களம் காணுகின்றனர்.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.2ம் கட்ட வாக்குப்பதிவு நவ.,3ந்தேதி நடைபெறுகிறது.3ம்கட்ட வாக்குப்பதிவு நவ.,7ந்தேதி நடைபெறுகிறது.வாக்கு எண்ணிக்கை நவ.,10ந்தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையை கடைபிடித்து அனைவரும் வாக்களிக்க பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்களிப்பு இன்று நடைபெறுகிறது. ஜனநாயகத்தில் உங்கள் கருத்து மிகப்பெரிய பலம் வாய்ந்தது.கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் கொண்டு ஜனநாயகத்தின் தேர்தல் திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் பங்கேற்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…