பாகிஸ்தானுடன் தொடர்புடைய 3 பேர் பீகாரிலிருந்து ‘கவுன் பனேகா குரோபதி’ என்ற லாட்டரி மூலம் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி டெல்லி காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. அதாவது பீகாரை சேர்ந்த இம்தியாஸ் அலி, இர்பான் அலி, சந்தோஷ்குமார் ஆகியோர் கவுன் பனேகா குரோபதி என்ற லாட்டரி மூலம் அங்குள்ள மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் பாகிஸ்தான் எண்ணிலிருந்து தனக்கு வாட்ஸ்அப் அழைப்பு வந்ததாகவும், கவுன் பனேகா குரோர்பதி லாட்டரியில் ரூ.25 லட்சம் வென்றதாக கூறப்பட்டதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.
மேலும் அவர்கள் வங்கி கணக்கில் ஜிஎஸ்டி மற்றும் செயலாக்கக் கட்டணங்களுக்கு பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார். பின்னர் லாட்டரி தொகை ரூ.45 லட்சமாகவும் ரூ.75 லட்சமாகவும் உயர்த்தப்பட்டதாகவும், எனவே அதிக பணம் டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த பெண்ணிடம் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 40-45 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறி அவர்களை உடனடியாக கைது செய்தனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…