பீகார் தேர்தலில் 1000 வாக்குகளுக்கு கீழே அமைந்த வெற்றிகள் ,ஹில்சாவில் 12 வாக்குகள் மட்டுமே

Default Image

பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை வழங்க முடிவு செய்திருக்கலாம் ,ஆனால் வெற்றியின் நிலமையையோ சற்று வித்தியாசமாக அமைந்து இருக்கிறது .ஏனெனில் சில இடங்களில் வெற்றிபெற்ற  வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் 1000 க்கு குறைவாகவே அமைந்துள்ளது .

பீகாரில் பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) தலைமையில் செயல்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ), ஒரு நெருக்கமான போட்டிக்கு க்கு பின்னர் வெற்றி பெற்றுள்ளது .ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) -111 தலைமையிலான பெரும் கூட்டணிக்கு எதிராக 124 இடங்களுடன் பெரும்பான்மையை கடந்தது கைப்பற்றியுள்ளது .243 இருக்கைகள் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மை மதிப்பெண் 122 ஆகும்.

ஆனால் சில தொகுதிகளில், வெற்றி அளவு நூலளவில் இருக்கிறது . பார்பிகாவில், ஜனதா தளம் (யுனைடெட்) வேட்பாளர் சுதர்ஷ்குமார் காங்கிரஸின் ’கஜனன் ஷாஹியை வெறும் 113 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். போர் தொகுதியில் , வெற்றி வித்தியாசம் 462 வாக்குகள் மட்டுமே .

ஆர்ஜேடியின் ஃபதேபஹதூர் டெஹ்ரியில் பாஜகவின் சத்ய நாராயணனை வெறும் 464 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் .மேலும்,ஹில்சாவில், ஜே.டி.யூ வேட்பாளர் வெறும் 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக என்று தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

15 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில்  தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையைக் பெற்றுள்ளது . இதில் பாஜக 73 இடங்களைப் பெற்றிருந்தாலும், 76 இடங்களை வென்று  ஒற்றை மிகப்பெரிய கட்சியாக ஆர்ஜேடி உருவெடுத்துள்ளது . அதன் வாக்கு சதவீதம் 23.03 ஆக உள்ளது.இது பீகார் சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்ததாகும்.

இதர கட்சிகள்:

காங்கிரஸ் போட்டியிட்ட 70 இடங்களில் 19 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. சிபிஐ (எம்எல்), சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) போட்டியிட்ட 29 இடங்களில் 16 இடங்களை வென்றுள்ளது.

அசாதுதீன் ஒவைசியின் AIMIM ஐந்து இடங்களிலும் , பீகாரில் அதன் கூட்டணி பங்காளியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தை மட்டும்  பிடித்ததுள்ளது .

என்.டி.ஏ-வில் இருந்து வெளியேறி கிட்டத்தட்ட 150 இடங்களுக்கு போட்டியிட்ட சிராக் பாஸ்வானின் லோக் ஜான்ஷக்தி கட்சி, ஒரு இடத்தை மட்டுமே வென்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்