பீகார் ரயில் விபத்து : மீட்பு பணிகள் நிறைவு.! 4 பேர் பலி.!

Bihar Train Accident

நேற்று இரவு சரியாக 9:30 மணி அளவில் டெல்லியில் இருந்து ஆனந்த் விஹார் என்ற இடத்தில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயிலானது பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டம், ரகுநாத்பூர் ரயில்வே நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுமார் 21 ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்வே தடம்புரண்ட செய்தி அறிந்ததும் உடனடியாக பயணிகள் மூலம் ரயில்வே துறைக்கு தகவல் தெரிவைக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைவு வந்து ரயில்வே மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மீட்டு பணியில் ஈடுபட்டனர். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் செல்போன் வெளிச்சத்திலேயே மீட்பு பணிகள் நடைபெற்றன. அதன் பிறகு அங்கு விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு தேசிய மீட்பு படையினரும், மருத்துவ குழுவினரும் மீட்பு பணியில் விரைவாக ஈடுபட்டனர்.

விபத்து குறித்து அறிந்ததும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், பக்சர் மாவட்ட உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறு கூறி மீட்புபணிகளை தீவிரப் படுத்தி உள்ளார். இந்த ரயில் விபத்து குறித்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் விபத்து அறிந்த உடன் தேசிய மீட்பு படையினருடக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர் என கூறினார்.

இந்த விபத்தில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது மீட்பு பணிகள் நிறைவு பெற்று விட்டதாகவும் விபத்து குறித்த காரணம் குறித்து ரயில்வேத்துறை சார்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்