பீகார் : ஆர்ப்பாட்டங்கள் ,போராட்டங்கள் நடத்தினால் அரசாங்க வேலைகள் அல்லது எந்தவிதமான அரசாங்க ஒப்பந்தமும் பெற முடியாது என்று பீகார் காவல்துறை எச்சரித்துள்ளது.
பீகார் காவல்துறை சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது,அதில் ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்கள்,தர்ணாவில் ஈடுபடுவது அல்லது சாலைகளை மறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அரசாங்க வேலைகள் அல்லது துப்பாக்கி உரிமம் ,பாஸ்போர்ட் போன்றவைகளை பெற முடியாது என்றும் எந்தவிதமான அரசாங்க ஒப்பந்தம் பெறுவதற்கு இது தடையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
இது குறித்து பீகார் டிஜிபி எஸ்.கே.சிங்கால் பிறப்பித்த உத்தரவுப்படி,வன்முறையாக மாறக்கூடிய ஒரு போராட்டத்தில் யாராவது பங்கேற்றால்,காவல்துறையினர் அவரது நடத்தை சான்றிதழ் அல்லது எழுத்துச் சான்றிதழில் இதைக் குறிப்பிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையை குறித்து கடுமையாக விமர்சித்துள்ள ஆர்ஜேடி தலைவரும், பீகார் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஷ்வி யாதவ்,தனது ட்விட்டர் பக்கத்தில் பீகார் முதல்வர் நித்திஷ்குமார் முசோலினி மற்றும் ஹிட்லருக்கு கடுமையான போட்டியைத் தருவதாக பதிவிட்டுள்ளார்.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…