கடந்த சில நாட்களாக இந்தியாவை உலுக்கிய ஒரு சம்பவம் தான் தெலுங்கானாவில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த பிரியங்காவை எரித்து கொன்ற 4 பேரை தெலுங்கானா போலீசார் சுட்டு கொன்றனர்.இதனால் பலரும் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.குறிப்பாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை இது போன்று தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதற்கு இடையில் தான் கடந்த 2012 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் கருணை மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.தற்போது இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏற்றவகையில் தான் பீகாரில் உள்ள பக்சர் சிறைக்கு உத்தரவு ஓன்று பிறப்பிக்கபப்ட்டுள்ளது.அதாவது ,10 தூக்கு கயிறுகளை வருகிற 14-ஆம் தேதிக்குள் தயாரித்து தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.பல சிறைகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் வசதி இருந்தாலும், ஒரு சில சிறைகளில் மட்டுமே தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது.அதில் ஓன்று தான் பக்சர் சிறை.இதனால் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவாக எழுந்து வரும் நிலையில் தற்போது இந்த உத்தரவு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…