வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனத்திற்கு ரூ.94.57 லட்சத்தை விபூதி அடித்த பீகார் ஹேக்கர்
அகமதாபாத்:வோடபோன் ஐடியா நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் பயன்படுத்தி வங்கிகளிலிருந்து ரூ.94.57 லட்சத்தை எடுத்த ஹேக்கர் அகமதாபாத்தில் கைது.
அகமதாபாத்தில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடியை ஹேக் செய்து ரூ .94.57 லட்சம் மோசடி செய்ததாக பீகார் கயாவைச் சேர்ந்த 21 வயது குல்ஷன் சிங் இளைஞரை அகமதாபாத் சைபர் கிரைம் செல் புதன்கிழமை கைது செய்ததுள்ளனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில் சமீபத்தில் வோடபோன் ஐடியாவிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்தது.ஒரு அறியப்படாத நபரால் இந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடியில் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும்.இந்த மர்ம நபர் இதன் மூலம் வங்கிகளுக்கு நெட்பேங்கிங் செய்யும் தொலைபேசி என்னை மாற்ற வேண்டும் என்று மின்னஞ்சல் செய்துள்ளார்.
வங்கிகளோ நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் இருந்து தானே வருகிறது என்று எண்ணி தொலைபேசி எண்ணை மாற்ற ஒத்துழைத்துள்ளனர்.பின்பு அந்த நிறுவனங்களின் தொலைபேசி எண்ணிற்கு பதிலாக தான் வாங்கிய புதிய சிம் கார்டை பயன்படுத்தி நெட்பேங்கிங் செய்யும் பொழுது வரும் OTP யை தான் வாங்கி இணைத்த புதிய எண்ணிற்கு வர வைத்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட குல்ஷன் சிங் அதிகாரப்பூர்வ ஐடியை ஹேக் செய்ய மெய்நிகர் தனியார் நெட்வொர்க்கை (வி.பி.என்) பயன்படுத்தியதாகவும் பின்னர் அவரது கணினி இருப்பிடத்தை மறைத்ததாகவும் போலீசார் கூறினர்.இதன் மூலம் சுமார் 94 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளார் என்று அகமதாபாத் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.