பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரெயில்வேக்கு பீகார் அரசு கொடுத்துவிடும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார்.
இந்தியாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கடந்த 40 நாள்களுக்கு மேலாக உள்ளது. இதனால், பிழைப்புக்காகவும், படிக்கவும் தங்கள் மாநிலங்களில் இருந்து வெளிமாநிலங்களில் சென்று பலர் படித்தும், வேலை செய்து வருகிறார்கள். தற்போது ஊரடங்கு காரணமாக அவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த சூழலில் வெளிமாநிலங்களிலிருந்து மாணவர்கள், தொழிலாளர்கள் பலர் நடந்தும், சைக்கிள் மூலமாகவும் தங்கள் சொந்த ஊர் செல்கின்றனர்.
இதனால், பிற மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக, மத்திய அரசு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், வெளிமாநிலங்களில் இருந்து பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரெயில்வேக்கு பீகார் அரசு நேரடியாக கொடுத்துவிடும் என கூறினார்.
இதற்கு முன் சிறப்பு ரெயிலில் வரும் தொழிலாளர்கள் தங்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டால் ரூ.1000 வழங்கப்படும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…