பீகார்: மருத்துவமனையில் புகுந்த வெள்ளம் தத்தளிக்கும் நோயாளிகள்..!
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாட்னாவில் உள்ள மருத்துவமனைகள் வெள்ளம் சூழ்ந்து உள்ளனர்.
நலந்தா மற்றும் கார்தனிபாக் மருத்துவமனையில் வெள்ளம் புகுந்து உள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நோயாளிகளை முடிந்த அளவிற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி உள்ளனர்.
Floods have drowned the complete Patna city. Bihar is calling they need you. Please take rapid actions please supply food and first aid. Please help Bihar. @Khalsa_Aid @khalsaaid_india @NDRFHQ @adgpi @BajpayeeManoj @TripathiiPankaj @narendramodi @PMOIndia @BBCHindi @aajtak pic.twitter.com/6QcxWHNkjY
— Prachi Trivedi (@PrachiT79639327) September 29, 2019
கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் இந்த தொடர் மழை இன்னும் சில தினங்களுக்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.