விவசாயியின் ஓய்வூதிய வங்கி கணக்கில் 52 கோடி தவறுதலாக ஏற்றப்பட்டுள்ள நிலையில், தங்கள் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் பணத்தை தங்களுக்கு தருமாறு அரசாங்கத்திடம் முதியவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய விவசாயி ஒருவரின் ஓய்வூதிய வங்கி கணக்கில் 52 கோடி ஏற்றப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்கில் அதிக அளவு பணம் இருப்பதை கண்ட முதியவர் இதை தனது வாழ்நாள் முழுவதும் செலவழிக்கலாம் என்ற எண்ணத்தில் மிகவும் சந்தோசமாக இருந்துள்ளது.
அதே போல வங்கிக்கு சென்று தனது கை ரேகையை வைத்து பார்த்த பொழுது 52 கோடிக்கு மேல் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அவர் ஆச்சரியம் அடைந்தாலும், அந்த தொகை தன்னிடம் இருந்து பெறப்பட்டு விடும் என்பதால் இவர் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அதாவது, நான் என் வாழ்நாளை விவசாயத்திலேயே முழுமையாக கழித்துள்ளேன். ஆனால், நான் ஏழ்மை நிலையில் இருக்கிறேன். எனவே அரசாங்கம் எனக்காக சிறிது பணத்தை விட்டு விடுங்கள் என அவர் கூறியுள்ளார். இதே போல தான் அண்மையில் ஒருவரது வங்கி கணக்கில் தவறுதலாக 5 லட்சம் பணம் ஏற்றப்பட்டிருந்த நிலையில், அவர் அதை செலவழித்து விட்டு பிரதமர் தனக்காக அனுப்பியது என கூறியிருந்தார்.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…