பீகாரில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களிழும், அதன் சுற்று வட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல், மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும், நேற்று நடந்த இறுதிக்கட்ட வாக்குபதிவில் 57.91% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இந்த தேர்தலில் முக்கியமாக 2 கூட்டணிகள் கருதப்படுகிறது. அது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மெகா கூட்டணி என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி.
பீகார் தேர்தலின்போது தேர்தலுக்கு பின் டைம்ஸ் நவ், ரிபப்ளிக், சி வோட்டர், என்.டி.டி.வி. ஆகிய ஊடங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 116 இடங்களை கைப்பற்றும் எனவும், மெகா கூட்டணி 120 இடங்களையும், லோக் ஜனசக்தி தலா 1 இடத்தையும், அதனைதொடர்ந்து மற்ற கட்சிகள் 6 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பீகாரில் இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், பிற்பகலில் முடிவுகள் தெரியவரும் என கூறப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் என அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, வாக்கு எண்ணும் மையங்களிழும், அதன் சுற்று வட்டார பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவும், 3 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த பணிக்காக சுமார் 8,000 துணை ராணுவ படையினர் ஈடுபடவுள்ளதாகவவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…