Bihar Elections: அடுத்த முதல்வர் யார்?? நாளை நடைபெறவுள்ளது “வாக்கு எண்ணிக்கை!”

Default Image

பீகார் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், நாளை வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளது.

பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும், நேற்று நடந்த இறுதிக்கட்ட வாக்குபதிவில் 57.91% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இந்த தேர்தலில் முக்கியமாக 2 கூட்டணிகள் கருதப்படுகிறது. அது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. இதில் ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மெகா கூட்டணி என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சிகள் கூட்டணி வைத்துக்கொண்டது.

இதன்படி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 180 இடங்களை ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. ஆனால், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 55 இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், மற்ற கட்சிகளுக்கு 8 இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு பின் டைம்ஸ் நவ், ரிபப்ளிக், சி வோட்டர், என்.டி.டி.வி. ஆகிய ஊடங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 116 இடங்களை கைப்பற்றும் எனவும், மெகா கூட்டணி 120 இடங்களையும், லோக் ஜனசக்தி தலா 1 இடத்தையும், அதனைதொடர்ந்து மற்ற கட்சிகள் 6 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆம்மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று 63 சதவீதம் தெரிவித்துள்ளதாகவும், நிதிஷ் குமாரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 21 சதவீதம் பேர் தெரிவித்தனர். மேலும், நிதிஷ் குமாரின் ஆட்சி சராசரியாக இருப்பதாக 29 சதவீதம் பேரும், மோசமாக இருப்பதாக 37 சதவீத பெரும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாளை பீகாரில் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என நாளை மாலைக்குள் தெரிந்துவிடும். இதற்காக பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் என அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்