Bihar Election Results 2020 live: பாஜக அபார வெற்றி.. பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!

Published by
Surya

Nov- 11: 04.12 AM:  ஜனநாயக கூட்டணி அபார வெற்றி:  243 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி= பா.ஜ.க -74, ஜே.டி.யு -43, வி.ஐ.பி – 4, ஹெச்.ஏ.எம் – 4 = 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மெகா கூட்டணி= ஆர்.ஜே.டி – 75, காங்கிரஸ் – 19, இடதுசாரிகள் – 16 = 110 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் மீண்டும் ஆட்சி ஆட்சியமைக்க தேவையான 122 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

Nov- 11: 03.30 AM: பீகார் மக்களுக்கு பிரதமர் நன்றி: மக்கள் ஆசீர்வாதத்துடன் பீகாரில் ஜனநாய கூட்டணி மீண்டும் வெற்றிபெறவுள்ளது. அனைத்து என்.டி.ஏ தொழிலாளர்களும் அவர்களுடன் பணியாற்றிய உறுதியும் அர்ப்பணிப்பும் பிரமிக்க வாய்ந்ததாகவும், பீகார் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Nov- 11: 03.18 AM: வாக்களித்த அனைவருக்கும் நன்றி: பீகாரில் நிதீஷ்குமார் தலைமையிலான ஆட்சி தொடரும் எனவும், நாங்கள் பீகாரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என பீகார் துணை முதல்வர் சுசில் மோடி தெரிவித்துள்ளார். மேலும், நல்லாட்சி மற்றும் வளர்ச்சி வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறியுள்ளார்.

Nov- 11: 02.18 AM: பாஜக கூட்டணி முன்னிலை: தற்போது வரை 237 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க 71 இடங்களையும், ஜே.டி.யு 41 இடங்களையும், வி.ஐ.பி. 4 இடங்களையும், ஹெச்.ஏ.எம் 4 இடங்களை கைப்பற்றி, மொத்தமாக 120 தொகுதிகளில் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. அதனைதொடர்ந்து மெகா கூட்டணியில் உள்ள ஆர்.ஜே.டி 74 இடங்களையும், , காங்கிரஸ் 19 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் அனைத்தும் 16 இடங்களை கைப்பற்றி மெகா கூட்டணி, 109 தொகுதியில் வெற்றிபெற்று பின்னடைவில் உள்ளது.

Nov- 11: 00.32 AM: 119 தொகுதிகளில் ஆர்ஜேடி கூட்டணி வெற்றிப் பெற்றுவிட்டதாக தெரிவித்தனர். தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறி தேர்தல் நடத்தும் அதிகாரி வாழ்த்தினார் என தேர்தல் ஆணையம் மீது ராஷ்டிரிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Nov- 11: 00.13 AM: இரவு 1 மணியளவில் பீகார் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக

Nov- 10: 11.45 PM:  பீகாரில் 202 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியானது. அதன்படி பாஜக 60 இடங்களிழும், ஐக்கிய ஜனதா தளம் 33 இடங்களிழும், ராஷ்டிரிய ஜனதா தளம் 64 இடங்களிலும், வென்றுள்ளது, காங்கிரஸ் கட்சி 16 இடங்களிழும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Nov- 10: 06.45 PM:  நள்ளிரவுக்கு பிறகே முடிவுகள் தெரியவரும்: பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவுக்கு பிறகே முழுமையான முடிவுகள் தெரிய வரும் என துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா தெரிவித்துள்ளார். மேலும், அங்கீகரிக்கப்பட்ட முடிவுகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதாகவும் தெரிவித்துள்ளார்.

Nov- 10: 05.30 PM: பீகாரில் நிச்சியம் ஆட்சி மாற்றம் ஏற்படும்: அனைத்து துறைகளிலிருந்தும் வேட்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகப்பவும், வாக்கு எண்ணிக்கையில் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், வாக்கு எண்ணும் பணிகள் நள்ளிரவு வரை நடைபெறும் என்றும், பீகாரில் நிச்சியம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Nov- 10: 05.25 PM: இரு கூட்டங்களுக்கும் கடும் போட்டி: பீகாரில் வாக்கு எண்ணும் பணிகள் நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி – 119 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி – 114 இடங்களில் முன்னிலயிலும், லோக் ஜனதா கட்சி 3 இடங்களிலும், மற்றவை 7 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

Nov- 10: 05.18 PM: 8 தொகுதிகளின் முடிவுகள்: பீகாரில் வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது 8 தொகுதிகளும் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதன்படி பாஜக 2 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 2 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடத்தில் மற்றும் விகாஷீல் இன்சான் 1 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Nov- 10: 05.08 PM: வாக்கு எண்ணிக்கை நீடிக்கும்: பீகாரில் இதுவரை 2 கோடி வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.

Nov- 10: 04.20 PM: முதல் வெற்றி பதிவு: ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் வேட்பாளர் லலித் குமார் யாதவ் 2,141 வாக்குகள் வித்தியாசத்தில் தர்பாங்க ரூரல் (Darbhanga Rural) தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணியின் ஜனதா தள வேட்பாளர் பரஸ் பத்மி 62,788 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

Nov- 10: 04.00 PM: 116 தொகுதிகளில் இழுபறி: பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே சுமார் 116 தொகுதிகளில் கடும் இழுபறி நிலவி வருகிறது. இதில் 74 தொகுதிகளில் வித்தியாசம் 1000 வாக்குகளுக்கும் கீழ் 42 இடங்களில் வித்தியாசம் 500 வாக்குகளுக்கும் கீழ் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nov- 10: 03.45 PM: 7,256 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை: பங்கா தொகுதியில், பாஜக வேட்பாளர் ராமநாராயண், 7256 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

Nov- 10: 03.38 PM: 40 சதவீத வாக்கு எண்ணிக்கை நிறைவு: பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளில் 40 சதவீத வாக்குகள் எண்ணி முடிந்ததாகவும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 1.60 கோடி வாக்குகள் எண்ணப்பட்டது. மேலும், 2.56 கோடி வாக்குகள் எண்ணப்படவுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Nov- 10: 02.20 PM: எம்.பி. பரபர தகவல்: ஆர்.ஜே.டி. எம்.பி மனோஜ் ஜா., தேஜஸ்வி முதல்வராவது தவிர்க்க முடியாதது எனவும், நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், ஆர்.ஜே.டிமுன்னிலை நிலவரங்களை ஊடகங்கள் வெளியிடாமல் மறைக்கிறதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Nov- 10: 02.00 PM: சங்கு ஊதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தொண்டர்கள்: பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் இருக்கும் காரணத்தினால் தொண்டர்கள், சங்கு ஊதி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Nov- 10: 01.47 PM:  4.10 கோடி வாக்குகள் பதிவான நிலையில், அவற்றில் 92 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளதாகவும், 3 கோடி வாக்குகளுக்கு மேல் எண்ண வேண்டியதுள்ளதாக பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். மேலும், வழக்கமாக 26 சுற்றுக்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், இந்த முறை 35 சுற்றுக்கள் மட்டுமே நடைபெற வேண்டியுள்ளதாகவும், சுற்றுக்கள் எண்ணிக்கை அதிகன் என்பதால் மாலைக்கு பிறகும் வாக்கு எண்ணிக்கை தொடரும் என பீகார் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Nov- 10: 01.10 PM: 3 கோடி வாக்குகள் எண்ண வேண்டியதுள்ளது: பீகார் சட்டமன்ற தேர்தலில் இதுவரை 4.10 கோடி வாக்குகள் பதிவான நிலையில், அவற்றில் 92 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளதாகவும், 3 கோடி வாக்குகளுக்கு மேல் எண்ண வேண்டியதுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமென கூறப்படுகிறது.

Nov- 10: 01.03 PM: வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரம்: ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி – 132 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி – 98 இடங்களில் முன்னிலயிலும், லோக் ஜனதா கட்சி 6 இடங்களிலும், மற்றவை 7 இடங்களில் முன்னிலையில் வகுக்கிறது.

Nov- 10: 12.58 PM: ஆதரவாளர்கள் கொண்டாட்டம்: பீகாரில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 125+ இடங்களில் முன்னிலை வகுக்கும் நிலையில், பாஜகவினர் ஆடல், பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Nov- 10: 12.40 PM: பீகாரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணையம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி 97 இடங்களிழும், ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி 118 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

Nov- 10: 11.54 AM: மீண்டும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியமைக்குமா?: பீகாரில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 130 தொகுதிகளை ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி பாஜக கைப்பற்றியது. இதனால் பீகாரில் மீண்டும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது.

Nov- 10: 11.41 AM: பாஜக முன்னிலை: பீகாரில் வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பங்கீபூரில் பாஜகவின் நிதின் நபீன் முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சத்ருகன் சின்ஹாவின் மகன் லுவ் சின்ஹா பின்னடைவு

Nov- 10: 11.25 AM:  தனிப்பெரும் கட்சியாக உருவாகுமா பாஜக?: பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் பாஜக அதிகபட்சமாக 71 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் பீகாரில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாக்க வாய்ப்புள்ளது.

Nov- 10: 11.09 AM: தற்போதைய நிலவரம்: ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி – 132 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி – 98 இடங்களில் முன்னிலயிலும், லோக் ஜனதா கட்சி 6 இடங்களிலும், மற்றவை 7 இடங்களில் முன்னிலையில் வகுக்கிறது.

Nov- 10: 11.00 AM: மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) முன்னிலை நிலவரம்:

  • ராஷ்ட்ரிய ஜனதாதளம் – 40
  • காங்கிரஸ் – 14
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)-6
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி -1

தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance ) முன்னிலை நிலவரம் :

  • ஐக்கிய ஜனதாதளம்- 26
  • பாஜக – 35
  • விகாஷில் – 5

Nov- 10: 10.45 AM: பாஜக முன்னிலை: வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி 61 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி 66 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

Nov- 10: 10.28 AM: 15 ஆண்டுகளாக நிதிஷ் குமார்: பல்வேறு தடைகளை தாண்டி நிதிஷ் குமார், கடந்த 15 ஆண்டுகளாக பீகாரில் ஆட்சியமைத்து வந்தார். தற்போதுள்ள முடிவுகளின்படி, அரசியல் தெளிவும், சணக்கியத்தனமும் கொண்ட நிதிஷ்குமார் இந்த தேர்தலில் தற்பொழுதுள்ள முடிவுகளின்படி, மாற்று ஆட்சி அமையவும் வாய்ப்புள்ளது.

Nov- 10: 10.00 AM: துப்பாக்கிச்சூடு வீராங்கனை முன்னிலை: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜமுய் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட துப்பாக்கிச்சூடு வீராங்கனை ஷ்ரேயாசி சிங், முன்னிலை வகித்து வருகிறார்.

Nov- 10: 9.42 AM: பிஜேந்திர பிரசாத் முன்னிலை: பீகார், சுபால் தொகுதியில் ஜக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ. பிஜேந்திர பிரசாத் முன்னிலையில் உள்ளார். இவர், சுபால் தொகுதியில் 7 முறை எம்.எல்.ஏ.வாக இருந்ததாகவும், 1990-ல் இருந்து ஒரு முறை கூட தோற்றது இல்லை என கூறப்படுகிறது,

Nov- 10: 9.31 AM: ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி – 121 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி – 107 இடங்களில் முன்னிலயிலும், லோக் ஜனதா கட்சி 6 இடங்களிலும், மற்றவை 6 இடங்களில் முன்னிலையில் வகுக்கிறது.

Nov- 10: 9.00 AM: 80 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை: ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி – 94 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி – 76 இடங்களில் முன்னிலயிலும், லோக் ஜனதா கட்சி 5 இடங்களிலும், மற்றவை 6 இடங்களில் முன்னிலையில் வகுக்கிறது.

Nov- 10: 8.49 AM: பின்னடைவில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி: தற்போதைய நிலவரப்படி, ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி – 53 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி – 73 இடங்களில் முன்னிலயிலும், லோக் ஜனதா கட்சி 4 இடங்களிலும், மற்றவை 6 இடங்களில் முன்னிலையில் வகுக்கிறது.

Nov- 10: 8.42 AM: மொத்த இடங்கள்: பீகாரில் 243 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 128 தொகுதிளில் வெற்றி பெரும் கட்சியில் வேட்பாளர், முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

Nov- 10: 8.42 AM: காங்கிரஸ் முன்னிலை: தற்போதைய நிலவரப்படி, ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி 41 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதனைத்தவிர்த்து, லோக் ஜனதா கட்சி 2 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

Nov- 10: 8.36 AM: நேரடி போட்டி: பீகார் சட்டப்பேரவை தேர்தல் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜே.டி.யு-பாஜக மற்றும் ஆர்.ஜே.டி-காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலுவி வருகிறது.

Nov- 10: 8.30 AM: மூன்றடுக்கு பாதுகாப்பு: வாக்கு எண்ணும் மையங்களிழும், அதன் சுற்று வட்டார பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவும், 3 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த பணிக்காக சுமார் 8,000 துணை ராணுவ படையினர் ஈடுபடவுள்ளதாகவவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nov- 10: 8.20 AM: 82 தொகுதிகளில் தபால் வாக்குகள்: பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 82 தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Nov- 10: 8.02 AM: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை: வாக்கு எண்ணிக்கைகாக 38 மாவட்டங்களில் 55 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது . முதல்கட்டமாக பீகாரில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது.

Nov- 10: 7.55 AM: முக்கிய கூட்டணி: இந்த தேர்தலில் முக்கியமாக 2 கூட்டணிகள் கருதப்படுகிறது. அது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மெகா கூட்டணி என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.

Nov- 10: 7.55 AM: பீகார் தேர்தல்: 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும்,இரண்டாம் கட்டமாக நடைபெற்ற வாக்குபதிவில் 55.70% வாக்குகளும், இறுதிக்கட்ட வாக்குபதிவில் 57.91% வாக்குகளும் பதிவாகியது. இதற்கான வாக்கு எண்ணிக்கை, இன்று தொடங்குகிறது.

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

2 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

3 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

3 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

12 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

14 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

15 hours ago