Bihar Election 2020: “எனக்கு நிதீஷ் குமாரின் வளர்ச்சி தேவை” மோடியின் பகிரங்கக் கடிதம்.!

Default Image

எனக்கு நிதீஷ் குமாரின் வளர்ச்சி தேவை என்று பீகார் மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

பீகாரில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலின் மூன்றாவது  மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி பீகார் மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “பீகாரில் உள்ள நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் ஆட்சியில் மாநிலத்தின் வளர்ச்சி தடம் புரட்டப்படாமல் இருப்பதற்கும், அது குறையாமல் இருப்பதற்கும் எனக்கு தேவை” என்று பிரதமர் மோடி இந்தியில் தனது நான்கு பக்க கடிதத்தை எழுதியுள்ளார்.

பீகாரின் வாக்குகள் சாதியின் அடிப்படையில் வாக்களிக்கப்படுவது அல்ல, வளர்ச்சிக்காக என்று பிரதமர் கூறியுள்ளார். “வாக்குகள் போடப்படுவது தவறான வாக்குறுதிகளுக்காக அல்ல, வலுவான நோக்கங்களுக்காக என்றும் மோசமான நிர்வாகத்திற்காக அல்ல, நல்லாட்சிக்காக. ஊழலுக்காக அல்ல, நேர்மைக்காக. சந்தர்ப்பவாதத்திற்காக அல்ல, சுய சார்புக்காக என்று நான் உறுதியாக நம்புகிறேன் என பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பீகாரில் மின்சாரம், நீர், சாலைகள், கல்வி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கான அனைத்து துறைகளிலும் என்.டி.ஏ பணிகள் செய்துள்ளன என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை, இறுதிக் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நேற்று முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த கடிதம் வெளியானது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்