பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.எனவே 243 தொகுதிகளை அடங்கிய பீகாரில் ,பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3வது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.மேலும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியும் போட்டியிடுகிறது.முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. குறிப்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் முதல்கட்ட தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகின்றது. இன்றுடன் பிரச்சாரம் நிறைவு பெறுவதால் தலைவர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…