பீகார் தேர்தல் 2020: சமூக இடைவெளியை உறுதி செய்ய துணை வாக்குச்சாவடிகள்!
பீகாரில், சமூக இடைவெளியை உறுதி செய்ய துணை வாக்குச்சாவடிகள்.
கொரோன வைரஸ் தொற்றுநோய்களுக்கு மத்தியில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக பீகாரில் அதிக வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், துணை வாக்குச் சாவடிகள் அதே கட்டிடம் அல்லது வளாகத்தில் அமைக்கப்படும். பீகார் மாநிலத்தில் கிட்டத்தட்ட 7.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பீகாரில் தற்போது 72,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. துணை வாக்குச் சாவடிகளை ஒரே கட்டடத்திலோ அல்லது வளாகத்திலோ அமைக்க முடியாவிட்டால், அது அருகிலுள்ள இடத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.