Bihar Election : கட்டிலில் கொண்டு சென்று வாக்களித்த 100வயது முதியவர்.!

Default Image

பீகாரில் நடைபெற்று வரும் இறுதி கட்ட வாக்கெடுப்பில் 100 வயது முதியவரை கட்டிலில் வைத்து அழைத்து சென்று வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும்,  செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும் பதிவாகியிருந்தது .  இதனை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான மூன்றாம் கட்ட வாக்குபதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த இறுதி கட்ட வாக்கெடுப்பில் வாக்க்ளிப்பதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டு 100 வயது முதியவர் வாக்குபதிவு செய்துள்ளார்.

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் உள்ள 100 வயது முதியவர் சுக்தேவ் மண்டல் . இவரை அவரது குடும்ப உறுப்பினர்கள் இணைந்து கட்டிலில் வைத்து வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைக்கிறார்கள் . அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்