ஐந்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி முதல்வருக்கு மரணதண்டனை – பீகார் நீதிமன்றம் தீர்ப்பு!
பாட்னாவில் உள்ள பள்ளியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த பள்ளி முதல்வர் அரவிந்த் குமார் என்பவருக்கு மரணதண்டனை வழங்கி பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்பொழுதைய காலகட்டத்தில் வேலியே பயிரை மேய்ந்தாற்போல பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்களை பாதுகாக்க வேண்டிய ஆசான்களே சிலர் அந்த குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள். அது போல பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவின் புல்வாரி ஷெரிப் எனும் பகுதி யில்உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் வகுப்பு படிக்க கூடிய மாணவி ஒருவரை மிரட்டி பள்ளியின் முதல்வர் அரவிந்த் குமார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருந்த பள்ளி முதல்வர் அரவிந்த் குமாருக்கு அவர் செய்த குற்றத்திற்காக மரண தண்டனையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் அபிஷேக் குமார் என்பவருக்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்து பீகார் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.