பெண்ணிடம் இப்படியா நடப்பது? சர்ச்சையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.!

முதல்வர் நிதிஷ் குமார் மேடையில் ஒரு பெண்ணுடன் நடந்து கொண்ட விதத்தை பீகாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கடுமையாக விமர்சனம் செய்தது.

Nitish Kumar woman at event sparks row

பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது, பெண் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொள்ள எப்படி நிற்பது எனத் தெரியாமல் தடுமாறினார்.

அப்போது, அந்த பெண்ணை புகைப்படம் எடுப்பதற்காக அந்த பெண்ணின் தோள் பட்டையில் கை வைத்து கேமராவை பார்த்து திரும்பமாறு கூறுகிறார். இது தொடர்பான வீடியோ சமுதாக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பீகாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பொது நிகழ்ச்சிகளில் இதுபோன்ற செயல் நடப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே, தேசிய கீதத்தின் போது, அவர் நடந்து கொண்ட விதம் குறித்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். இப்போது இந்த கூட்டுறவுத் துறையின் நிகழ்ச்சியின் போது முதல்வர் நிதிஷ் குமாரின் சர்ச்சைக்குரிய செயல் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்