ராஜினாமா செய்தார்.. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்..!
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் ( ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார் தற்போது தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கொடுத்துள்ளார்.
இன்று காலை ஜேடியு எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார், ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆட்சியை கலைக்க கோரி ஆளுநரிடம் கூறியுள்ளேன். பலபேரிடம் இந்த ஆலோசனை கேட்ட பிறகே இந்த முடிவை நான் எடுத்துள்ளேன் எனவும், ஒரு மகா கூட்டணியை அமைக்க உள்ளேன் என்றும், அரசியல் சூழ்நிலை காரணமக லாலுவிடம் இருந்து விலகுகிறேன் என்றும், செய்தியாளர்களிடம் அவர் கூறி இருக்கிறார்.
இது நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும்! மாநாட்டில் பிரதமர் மோடி உரை!
2015 சட்டமன்ற தேர்தலில் ஆர்.ஜே.டி, காங்கிரசுடன் இணைந்து பா.ஜ.க வை எதிர்த்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். அதன் பின் 2017 ல் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கைகோர்த்து புதிய ஆட்சியும் அமைத்தார். அதன்பின் 2020 ல் பாஜகவுடன் சேர்ந்து நின்று தேர்தலில் வெற்றி பெற்றார். பிறகு 2022 ல் ஆர்.ஜே.டி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தார். தற்போது ஆர்.ஜே டி கூட்டணியை முறித்து கொண்டு மீண்டும் பாஜகவோடு இணைய உள்ளார்.
இன்று மாலை 5 மணி அளவில் பா.ஜ.க எம்.எல்.ஏ க்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் உரிமை கோரியிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பிரதான கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணி அமைக்க முக்கிய பங்காற்றியவர் நிதிஷ்குமார். தற்போது இவரது விலகல் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.