தேசிய கீதம் இசைக்கும் போது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயலால் சர்ச்சை.! வைரலாகும் வீடியோ…

நிதிஷ் குமாரின் இந்தச் செயலால், அவர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) மற்றும் சில சமூக ஊடக பயனர்கள் விமர்சிக்க தொடங்கினர். 

nitish kumar national anthem

பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சிரித்து கொண்டு கைகளால் சைகை காட்டிய வீடியோ வைரலானதை அடுத்து விவாதத்தை கிளப்பியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி விவாதத்தை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவின் பின்னணியில் ‘ஜன கண மன…’ என்ற தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், நிதிஷ் தன் அருகில் நிற்கும் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளருமான தீபக் குமாருடன் சிரித்துக் கொண்டு பேசுவது கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் அவரை பார்த்து சிரிக்க தொடங்கியதும், முதல்வர் நிதிஷ் குமார் புன்னகைத்து கைகளை கூப்பி வணக்கம் வைத்தார்.

தேசிய கீதம் இசைக்கப்படும்போது மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நிற்பது வழக்கம். ஆனால், நிதிஷ் குமாரின் இந்தச் செயல், அவர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) மற்றும் சில சமூக ஊடக பயனர்கள் விமர்சிக்க தொடங்கினர்.

ஆர்ஜேடியைத் தவிர, பீகார் காங்கிரசும் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளதுடன், முதல்வர் நிதிஷ் குமார் தேசிய கீதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “நிதீஷ் குமார் ஒவ்வொரு நாளும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களை அவமதிப்பதாகவும், சில நேரங்களில் மகாத்மா காந்தியின் தியாக நாளில் கைதட்டி, அவரது தியாகத்தை கேலி செய்கிறார்கள்.

நீங்கள் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். நீங்கள் ஒரு சில நொடிகள் கூட மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிலையாக இல்லை, மேலும் நீங்கள் மயக்க நிலையில் நிலையில் இருப்பது மாநிலத்திற்கு மிகுந்த கவலையளிக்கும் விஷயம். பீகாரை இதுபோல் மீண்டும் மீண்டும் அவமதிக்காதீர்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்