மதுவிலக்கு அமல் செய்த பிறகு பீகாரில் குற்றங்கள் குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தின் முதல்வராகிய நிதீஷ்குமார் பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்தி உள்ளார். இந்த சட்டத்தின்படி மது விற்பனை செய்பவர்கள், குடிப்பவர்கள் மற்றும் மதுவை பதுக்கி வைப்பவர்களுக்கு 10 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக தற்போது பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பாட்னாவில் செய்தியாளர்களை சந்திப்பில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தி இருப்பதால் எனக்கு எதிராக பலர் திரும்பி உள்ளனர். ஆனால் நான் இந்த கருத்தில் தீவிரமாக இருக்கிறேன்.
மக்களிடம் கேட்டபோது ஆண்கள் மற்றும் பெண்கள் பலரும் இந்தத் திட்டத்தை ஆதரிக்கிறார்கள். எனவே நானும் மதுவுக்கு எதிராக நிற்கிறேன். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பின் குற்றங்கள் அதிகரிக்கவில்லை. மாறாக குற்றங்கள் அனைத்தும் குறைந்துள்ளது. அப்படி ஏதாவது குற்றங்கள் நடந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…