பீகார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் சந்திப்பு.!

Nitish Arvind K Meet

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இன்று டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) எதிராக, அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற முயற்சிகளுக்கு இடையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு சென்று பேசியுள்ளார்.

அவருடன் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் கட்சித் தலைவர்கள் மனோஜ் ஜா, லாலன் சிங் மற்றும் சஞ்சய் ஜா ஆகியோரும் இந்த சந்திப்பில் இடம்பெற்றுள்ளனர். மத்திய அரசின் தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் (என்சிசிஎஸ்ஏ) அவசரச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை அணுகப்போவதாக கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. கடந்த வாரம், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், சிவசேனா தலைவருமான ஆதித்யா தாக்கரேயும், கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்