மீண்டும் தலைவராக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்வு..!

கடந்த அக்டோபர் 30, 2003 அன்று பிற்பகுதியில் ஜனதா தளம், லோக் சக்தி மற்றும் சமதா கட்சி ஆகியவற்றின் இணைப்புடன் ஐக்கிய ஜனதா தளம் உருவாக்கப்பட்டது. இதில் ஜனதா தளத்தின் அம்பு சின்னமும், சமதா கட்சியின் பச்சை வெள்ளை கொடியும் இணைந்து ஐக்கிய ஜனதா தளத்தின் தேர்தல் சின்னமாக மாறியது. கடந்த  2004 முதல் 2016 வரை ஜனதா தளம் கட்சியின் தேசியத்  தலைவராக  ஷரத் யாதவ் இருந்தார்.

அதேசமயம், நிதிஷ்குமார் 2016 முதல் 2020 வரை இந்தப் பதவியில் இருந்தார். அவருக்குப் பிறகு, ராமச்சந்திர பிரசாத் சிங் 2020 முதல் 2021 வரை பொறுப்பேற்றார். அவருக்குப் பிறகு லாலன் சிங் அக்கட்சியின் தேசியத் தலைவர் பதவியில் இருந்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்று வரும் அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக லாலன் சிங் தெரிவித்தார். இதையடுத்து, அப்பொறுப்பை நிதிஷ் குமார் ஏற்றுக்கொண்டார்.

பீகார் தவிர, ஐக்கிய ஜனதா தளம் ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. 2005ல் ஜார்க்கண்டில் ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்கள் கிடைத்தன. இது 2009 இல் இரண்டாகக் குறைந்தது. ஐக்கிய ஜனதா தளம் 2014 இல் 11  இடங்களிலும், 2019 இல் 45 இடங்களில் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அருணாச்சல பிரதேசத்தில் 2019 சட்டமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் 14 இடங்களில் போட்டியிட்டனர். இதில் ஏழு கட்சி வெற்றி பெற்றது. தற்போது அனைவரும் பாஜகவில் இணைந்துள்ளனர். இதேபோல், மணிப்பூரில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் 38 இடங்களில் போட்டியிட்டனர். இதில் 6 இடங்களில்  வெற்றி பெற்றது. பின்னர் இவர்களில் 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

இதனால் மணிப்பூரில் இப்போது ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ உள்ளார். அதே நேரத்தில், அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh
jos buttler