#BREAKING: பீகாரில் மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் வரும் 15ம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுபோன்று பீகாரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
எனவே, பீகாரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு, சில புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார். இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் மே 15 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்றும் அப்போது, மே 15 வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதன் விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் தொடர்பாக, இன்று நிர்வாகக் குழு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
कल सहयोगी मंत्रीगण एवं पदाधिकारियों के साथ चर्चा के बाद बिहार में फिलहाल 15 मई, 2021 तक लाॅकडाउन लागू करने का निर्णय लिया गया। इसके विस्तृत मार्गनिर्देशिका एवं अन्य गतिविधियों के संबंध में आज ही आपदा प्रबंधन समूह (Crisis management Group) को कार्रवाई करने हेतू निदेश दिया गया है।
— Nitish Kumar (@NitishKumar) May 4, 2021