பீகார் ( 2020) சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் பாஜக அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் அக்.,28ந்தேதி தொடங்கி நவ., 3 மற்றும் நவ.,7ந்தேதி என மூன்று கட்டங்களாக இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக மற்றும் ஆளும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் தங்களது தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், “மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 122 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதேபோல பாஜவிற்கு 121 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கிய தொகுதிகளில் இருந்து 7 இடங்கள் ஜிதன் ராம் மன்ஜியின் இந்துஸ்தான் அவாம் மோர்சாவிற்கு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த தேர்தலில் லோக் ஜனசக்தியானது தனித்து விடப் பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில பாஜ தலைவர் மற்றும் பெட்டியா எம்பியுமான சஞ்சய் ஜெய்ஸ்வால் இது குறித்து கூறுகையில், “பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் கூட்டணியானது அப்படியே இருக்கின்றது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாக நிதிஷ்குமார் உள்ளார். அவரது அனுமதியின்றி கூட்டணியில் யாரும் சேருவதோ, வெளியேறுவதோ இஇயலாது” என்று கூறினார்
இந்நிலையில் இத்தேர்தலில் பாஜக ஜேடியு கூட்டணியை எதிர்த்து லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி களமிறங்குகிறது. இந்நிலையில் மெகா கூட்டணியில் நேற்று விரிசல் ஏற்பட்டது. இக்கூட்டணியில் சேர்ந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி 7 இடங்களை கேட்டிருந்தது. ஆனால் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி 2 தொகுதிக்கு மேல் தர முடியாது என்று உறுதியாக கூறிவிட்டார். இதனால் 7 தொகுதியில் தனித்து போட்டியிடப் போவதாக ஜேஎம்எம் கட்சி நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தொகுதி பங்கீடுகள்முடிந்த நிலையில், பாஜக 27 தொகுதிக்கான முதல் வேட்பாளர்களின் பட்டியலை நேற்று வரிசையாக வெளியிட்டது.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…