பரபரப்பாகும் அரசியல் களம்.! நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் முக்கிய சந்திப்பு.!
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் , துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் உத்தவ் தாக்கரே இல்லத்தில் சரத் பவரை சந்திக்க உள்ளனர்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா ஓர் அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்திக்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது உத்தவ் தாக்கரே இல்லத்தில் நடைபெற உள்ளது எனவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்துவதற்கு பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசித்து வருகிறார்.ஏற்கனவே, புவனேஸ்வரில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒடிசா பிரதமர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மதியம் இந்த சந்திப்பு உத்தவ் தாக்கரே இல்லத்தில் நடைபெற உள்ளது.